சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த ஆண்டு, மான்கள் உயிரிழப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுமானப் பணிகள் மற்றும் அண்மையில் ராஜ்பவனில் இயற்கையாக அமைந்த புல்வெளிகள் அகற்றப்பட்டு அப்பகுதியில் வெளிநாட்டுச் செடிகள் நடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் வெளிமான்கள் உள்ளிட்ட தாவர உண்ணிகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2017 - 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 10 வெளிமான்களும், 14 மான்களும் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், 2021ம் ஆண்டு ஜனவரி முதல் 2022 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 16 வெளிமான்களும், 8 மான்களும் ராஜ்பவனில் உயிரிழந்துள்ளன. சென்னையின் பெருமைகளில் ஒன்றாக விளங்கும் கிண்டி தேசியப் பூங்கா சென்னைக்கு நுரையீரலாகவும் செயல்பட்டு வருகிறது. இப்படி சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் மான்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தீப்பிடிக்கும் மின்சார வாகனங்கள் - மத்திய அரசு எடுத்த புதிய முடிவு