சுற்றுச்சூழல்

ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு?

ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு?

EllusamyKarthik

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வரும் 2022 முதல் ஒற்றை பயன்பாட்டு முறை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய, இறக்குமதி செய்ய  அரசு தடை விதிக்க உள்ளது. 

ஒவ்வொரு கட்டமாக இந்த தடையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதேபோல பாலித்தீன் பையின் தடிமனையும் 50 மைக்ரானிலிருந்து, 120 மைக்ரானாக அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2022 முதல் இந்த தடை அமலாகும் என தெரிகிறது.

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புறச் சூழல் மாசடைந்து வருவதால் இந்த தடையை இந்தியா அரசு அமல்படுத்த உள்ளதாம்.  கடந்த 2018-இல் வெளியான அறிக்கையின் படி உற்பத்தியாகும் பிளாஸ்டிக் பொருட்களில் 43 சதவிகிதம் சிங்கிள் யூஸாகவே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.