உங்கள் குழந்தை இரவில் தூங்கும்போது குறட்டைவிட்டால் அவர்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என குழந்தைகள் நல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் ஒரு வாரத்தில் 4 நாட்கள் குறட்டைவிட்டு தூங்கினால் அவர்கள் உடலில் ஆரோக்கிய கோளாறுகள் உள்ளன என்று அர்த்தம். மூச்சு விடுதல் என்பது மூளையால் கட்டுபடுத்தப்பட்டு தற்செயலாக நிகழ கூடிய ஒரு விஷயம். அதில் சிரமம் அல்லது குறட்டை போன்றவை ஏற்பட்டால் உடனடியாக காது மூக்கு தொண்டை நிபுணர்களிடம் அழைத்து சென்று, தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைகள் குறட்டை விடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மூளைக்குச் செல்லும் நரம்புகளில் சிறு கோளாறுகள், மூச்சுத்திணறல், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்த அளவில் இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு குறட்டை ஏற்படுகிறது. இதனால் அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே குழந்தைகள் மூச்சுவிடுவதை அறிகுறியாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.