சுற்றுச்சூழல்

இன்சுலின் ஊசிக்கு பதில் மாத்திரை - அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை

இன்சுலின் ஊசிக்கு பதில் மாத்திரை - அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை

webteam

ஊசியாக போடப்பட்டுவந்த இன்சுலின் மருந்தை மாத்திரையாக உருவாக்கி அமெரிக்க ஆய்வாளர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர். 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ‘டைப் ஒன்’ சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாள்தோறும் ஒருமுறையோ, இருமுறையோ இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறார்கள். தோலுக்கு அடியில் செலுத்திக்கொள்ளும் இந்த இன்சுலினை ஊசிக்குப் பதில், மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக்கல்வி நிறுவன ஆய்வாளர்கள் தயாரித்த மாத்திரை பன்றியிடம் கொடுத்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பரிசோதனை முடிவுகள் நேச்சர் மெடிசன் என்ற இதழில் வெளியாகியுள்ளது. இந்த மாத்திரையை உட்கொண்டவுடனே நேரடியாக சிறுகுடலை சென்றடையும் என்றும், 30 மில்லி மீட்டர் நீளத்திற்கு இந்த மாத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.