சுற்றுச்சூழல்

ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானை கூட்டம்

ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானை கூட்டம்

kaleelrahman

கர்நாடக தமிழக எல்லையில் ஊருக்குள் நுழைந்த 25 காட்டு யானைகள். நீண்ட நேரம் போராடி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் இருமாநில வனத்துறையினர் விரட்டினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தமிழக கர்நாடக மாநில எல்லையான தேவரட்டம் வனப்பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குமரபுரம் மற்றும் தும்மணபள்ளி ஆகிய கிராமங்களில் நுழைந்து அங்குள்ள விளைநிலங்களில் தஞ்சமடைந்தன.

மேலும் அங்குள்ள கத்தரிக்காய், கோஸ், வாழைத்தோட்டம் பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இருமாநில வனத்துறையினர் யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பட்டாசு வெடித்தது விரட்டினர்.

தொடர்ந்து யானைகள் தம்மணப்பள்ளியில் உள்ள கத்தரிக்காய் தோட்டத்தில் நுழைந்து அங்குள்ள குட்டையில் நீராடியது. இதையடுத்து யானைகள் தஞ்சமடைந்துள்ள தகவல் அறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் யானைகளை பார்க்க குவிந்தனர்.

இதையடுத்து இருமாநில வனத்துறையினர் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு யானைகளை பட்டாசுகள் வெடித்து அருகில் உள்ள தேவர்பெடா வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.