கல்வி

"கோவை அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சேர அக்.30 வரை விண்ணப்பிக்கலாம்" - மாவட்ட ஐ.டி.ஐ

"கோவை அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சேர அக்.30 வரை விண்ணப்பிக்கலாம்" - மாவட்ட ஐ.டி.ஐ

EllusamyKarthik

8 மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (ஐடிஐ) சேர வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலம் அருகில் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு மத்திய அரசின் சான்று வழங்கப்படுகிறது. பயிற்சிபெறுபவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோ மீட்டர் தொலைவு வரை இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. பயிற்சியை நிறைவும் செய்யும் தருவாயில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

இங்கு, ஃபுட் புரோடக்ஷன், பிபிஓ, வெல்டர், இன்டீரியர் டிசைன் அண்ட் டெக்கரேஷன், ஷீட் மெட்டல் வொர்க்கர் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும், டிரோன் பைலட் என்ற 6 மாத கால குறுகிய பயிற்சிக்கும் காலியாக உள்ள இடங்களை பூர்த்தி செய்ய வரும் 30ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது. இதில், 8 மற்றும் 10ஆம் வகுப்பு முடித்த 40 வயதுவரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு வயது உச்சவரம்பு இல்லை. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2642041, 9442624516, 8667408507, 9443171698 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வராஜன் தெரிவித்தார்.