கல்வி

வெளியானது 2022க்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பாணை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?

வெளியானது 2022க்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பாணை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?

நிவேதா ஜெகராஜா

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் துணை ஆட்சியர் பதவிக்கு 18 காலி பணியிடம், துணை கண்காணிப்பாளர் பதவிக்கு 26 காலி பணியிடம், துணை ஆணையர் பதவிக்கு 25 காலி பணியிடம், துணைப் பதிவாளர் பதவிக்கு 13 காலி பணியிடம், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பதவிக்கு 7 காலி பணியிடம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் பதவிக்கு 3 காலி பணியிடம் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பணியிடங்களுக்கு அக்டோபர் 30ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ள டிஎன்பிஎஸ்சி, முதன்மைத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பானையின் முழுவிவரங்களை அறிய, இங்கே க்ளிக் செய்யவும்