கல்வி

கல்விக்கடன் வழங்குவதைக் குறைக்க திட்டம்

கல்விக்கடன் வழங்குவதைக் குறைக்க திட்டம்

webteam

கல்விக்கடன் வழங்குவதை குறைத்துக்கொள்ள சில தனியார் வங்கிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் செலுத்தப்படாத கல்விக்கடன் அதிகரித்து வருவதால் இந்த முடிவை வங்கிகள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பொறியியல் உள்ளிட்ட படிப்பு முடித்த பல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போவதால், அவர்களால் கல்விக்கடனை திரும்ப செலுத்த முடிவதில்லை. மேலும், கடன் பெற்ற மாணவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்கள் மாற்றப்பட்டுவிடுவதால், மாணவர்களை கண்டறிய முடிவதில்லை என வங்கிகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற காரணங்களால், கல்விக்கடன் வழங்கும் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தகுதியான மாணவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கல்விக்கடன் வழங்கி வருவதாக தயாராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.