போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக புதிய பாடத்திட்ட மாற்ற செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் மாற்றப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இந்நிலையில் மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தை மே 4 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். இது குறித்து உதயசந்திரன் ஐஏஎஸ் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு நேர்காணல் பின்வருமாறு:-
கிராமப்புறங்களில் நேரடியாக முதல் வகுப்பில் தான் மாணவர்களை சேர்க்கிறார்கள், எப்படி இருக்கும் முதல் வகுப்பு புத்தகங்கள்?
- மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையில் இருக்கும். இந்தியாவின் தலைச்சிறந்த வல்லூர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு +2 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பபட்டிருக்கிறதா?
- நீட் உட்பட அனைத்து தேர்வுகளுக்கும் உதவும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 11 ம் வகுப்பில் இயற்பியலில் மெக்கானிக்கல் பாடப்பிரிவு செயல் விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.
- +2 பாடப்புத்தகத்தில், படிப்பிற்கு அடுத்து என்னப்படிக்கலாம் என்ற விவரமும் இருக்கிறது.
சிபிஎஸ்சி தரத்தோடு ஒப்பிட்டால் இந்தப்பாடப்புத்தகம் எப்படி இருக்கும்?
- சிபிஎஸ்சி பாடப்புத்தகங்கள் 10 ஆண்டுகள் பழமையானது, இதில் பல போதாமைகள் இருக்கின்றன, இதை நிவர்த்தி செய்யும் வகையில் இருக்கும். மேலை நாடுகளில் இருந்து சிலவற்றை எடுத்து சேர்த்திருக்கிறோம்.
புத்தகத்தில் qr code மூலம் ஸ்கேன் செய்யும் வசதி இருக்கிறது இதற்கான கட்டமைப்புகள் அரசுப்பள்ளிகளிடம் இருக்கிறதா?
- ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய திட்டம் தயாராக இருக்கிறது.
- யாரை வைத்து பாடம் எழுதப்பட்டதோ அவர்களே ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
- பாடத்தை எவ்வாறு நடத்துவது என வீடியோக்கள் இணையத்தில் அப்லோடு செய்யப்படும்.
- தமிழ் பாடத்திட்டத்தில் நவீன இலக்கியம் உட்பட பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.
ஐஐடி ,ஜெஇஇ தேர்வில் தமிழகம் தேசிய அளவில் 20 இடத்தில் இருக்கிறது. மனப்பாட திறமையை தான் தமிழகம் வளர்க்கிறது, புரிந்து படிக்கும் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதா?
- ஐஐடி, ஜெஇஇ தேர்வில் தீர்வுகளை சரிப்படுத்தும் முறை, நம்முடைய படிப்பு தியரி சம்பத்தப்பட்டதாக இருந்தது. இதை இம்முறை மாற்றி இருக்கிறோம்.
- ஐஏஎஸ் தேர்வு எழுதிய மாணவர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.போட்டித்தேர்வுகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களின் ஆலோசணைகள் இடம்பெற்றுள்ளன. குடிமைப்பணிகளுக்கு செல்பவர்களுக்கும் இது உதவும்.