ஐடி ஊழியர்கள் நீக்கம் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள இன்போசிஸ் நிறுவனம், இந்தாண்டு 20 ஆயிரம் ஊழியர்களை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீன் ராவ் சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஐடி துறையில் வேலை வாய்ப்பு அமோகமாக இருப்பதாகவும், இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து 400பேர் மட்டும் பணித்திறன் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் இந்த எண்ணிக்கையை பெருமளவு அதிகப்படுத்தி தவறான தகவல்களை சிலர் பரப்புவதாகவும் அவர் கூறினார். மேலும் இந்தாண்டு ஐடி-துறையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் பல லட்சம் பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.