மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேல்நிலை ப்பள்ளி PT
கல்வி

மகாகவி பாரதியார் பயின்ற பள்ளியில் படித்த மாணவன் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

தந்தையை இழந்த இந்த மாணவனுக்கு 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை ஆசிரியர்கள் தான் பள்ளிக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

PT WEB

சாதிப்பதற்கு வசதி வாய்புகள் எதுவும் தேவையில்லை. நோக்கமும், கவனமும் இருந்தால் போதும் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன பிரபாகரன். என்ற மாணவன்.

தென்னகத்தின் ஆஸ்போர்ட் என்ற பெயர் பெற்ற பள்ளிகளை பின்னுக்கு தள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மாணவன் அர்ஜுன பிரபாகரன் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அர்ஜுன பிரபாகரன்

படிக்க வைக்க தந்தை இல்லை! பார்த்து பார்த்து உணவளித்து கவனிக்க தாயும் உடல் நலமாக இல்லை !! ஆசிரியர் தந்த ஊக்கமும், கட்டண உதவியும் கொண்டு நெல்லை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர் அர்ஜுன பிரபாகரன்.

மகாகவி பாரதியார் பயின்ற 150 ஆண்டுகள் தாண்டிய பழமை வாய்ந்த "மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேல்நிலைப் பள்ளியில்" 10 ம் வகுப்பில் தமிழ் வழியில் பயின்ற மாணவர் அர்ச்சுன பிரபாகரன், 495/500 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ் - 97

ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 99

சமூக அறிவியல் - 100.

Total - 495.

மாணவனின் சொந்த ஊர் வல்லநாடு.

அப்பா பெயர்: மாணிக்கவாசகர் (லேட் ).

அம்மா பெயர்: பண்டார செல்வி.

தந்தையை இழந்த இந்த மாணவனுக்கு 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை ஆசிரியர்கள் தான் பள்ளிக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.