பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனிக்காமல் விட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எனவே பள்ளிகளை விரைவில் திறப்பதே நல்லது என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஓராண்டுக்கு மேலாகி விட்டது என்றும் இது அவர்களை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது என்றும் நிலைக்குழு கூறியுள்ளது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாதது அந்தந்த குடும்பங்களை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
பள்ளிகள் மூடலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில்கொண்டு அவற்றை திறப்பதைக் கூட ஆலோசிக்கலாம் என்றும் சஹஸ்ரபுத்தே தலைமையிலான எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்தில் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, பள்ளிகளை இரு ஷிஃப்டுகளில் பாடங்களை சொல்லித்தருவது, வேறுவேறு நாட்களில் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற பள்ளிகளை திறக்கலாம் என அந்தக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.