இந்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனமான, கிண்டியில் உள்ள என்.எஸ்.ஐ.சி டெக்னிக்கல் சர்வீசஸ் சென்டரில் (NSIC) இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 13.12.2019
பயிற்சி வகுப்புகள் தொடங்கும் தேதி: 18.12.2019
பயிற்சி வகுப்புகள்:
1. புரோடோடைபிங் இன்ஜினியர் (Prototyping Engineer)
2. டூல் டிசைனர் (Tool Designer)
பயிற்சி காலம்:
1. புரோடோடைபிங் இன்ஜினியர் - 15 வாரங்கள்
2. டூல் டிசைனர் - 13 வாரங்கள்
வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி:
B.E / Diploma இன் மெக்கானிக்கல் / ஆட்டோ மொபைல் / மெக்கட்ரானிக்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://tinyurl.com/nsic-sponsered-programs - என்ற இணையதள முகவரியில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்பு கல்வி மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, TC, சாதி சான்றிதழ் மற்றும் 2 புகைப்படங்கள் போன்றவற்றை நேரில் எடுத்துச்சென்று பயிற்சியில் சேரலாம்.
குறிப்பு:
ஆண்களுக்கு மட்டும் விடுதி வசதி உண்டு