கல்வி

வெளியானது முதுநிலை நீட் தேர்வு முடிவுகள்... ரிசல்ட்டை அறிவதற்கான நேரடி லிங்க் இங்கே!

வெளியானது முதுநிலை நீட் தேர்வு முடிவுகள்... ரிசல்ட்டை அறிவதற்கான நேரடி லிங்க் இங்கே!

நிவேதா ஜெகராஜா

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, பல்வேறு குழப்பங்களுக்கும் வழக்குகளுக்கு இடையே, கடந்த 21-ம் தேதி நீதிமன்ற அனுமதியோடு நடைபெற்றது. இதுதொடர்பான மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் கடந்த மே 13-ம் தேதி நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், முதுநிலை நீட் 2022 தேர்வு நடக்கும் தேதியில் மாற்றம் இல்லை என்று கூறினர். அதைத்தொடர்ந்து அறிவிப்பாணையின்படி மே 21ம் தேதி முதுநிலை நீட் 2022 தேர்வு நடைபெற்றிருந்தது.

நீதிமன்ற தீர்ப்புப்படி 21-ம் தேதி நாடு முழுவதும் 849 மையங்களில் முதுநிலை நீட் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 1,82,318 பேர் நீட் தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தேர்வில் தேர்ச்சியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். 10 நாள்களிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டதற்கு தேசிய தேர்வு வாரியத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

NEET-PG result is out!

I congratulate all the students who have qualified for NEET-PG with flying colours.

I appreciate @NBEMS_INDIA for their commendable job of declaring the results in record 10 days, much ahead of the schedule.

Check your result at https://t.co/Fbmm0s9vCP
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) June 1, 2022

தேர்வு முடிவுகளை https://www.nbe.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

https://drive.google.com/file/d/1xRrqn0G8A_PO2mkpN1zhbmlZz2i9t9Jz/view என்ற நேரடி லிங்க் வழியாகவும் மாணவர்கள் தங்கள் தேர்வு  முடிவை அறியலாம்.