2021 ஆம் ஆண்டிற்கான பொது மேலாண்மை சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் நுழைவுச் செட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் cmat.nta.nic.in இந்த லிங்கை பயன்படுத்தி தங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வரும் 31 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெற உள்ளது. முதல் ஷிப்ட் காலை 9 முதல் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 3 முதல் 6 மணி வரையிலும் நடைபெற உள்ளது. Innovation மற்றும் Entrepreneurship பிரிவை தேர்வு செய்த மாணவர்களுக்கு தேர்வில் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் cmat.nta.nic.in என்ற இந்த லிங்கை பயன்படுத்தி விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை கொண்டு நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக நடைபெறும் இந்த தேர்வில் மொத்தம் 500 மதிப்பெண்கள். 125 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களும் நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. ஆங்கில் வழியில் இந்த தேர்வு நடைபெறுகிறது.