கல்வி

ராணுவ நர்சிங் சர்வீஸில் சேர அறிவிப்பாணை வெளியீடு

ராணுவ நர்சிங் சர்வீஸில் சேர அறிவிப்பாணை வெளியீடு

webteam

இந்திய ராணுவத்தில் மிலிட்டரி நர்சிங் சர்வீஸ்-இல் 4-வருட பி.எஸ்.சி நர்சிங் படிப்பு மற்றும் பயிற்சியுடன் கூடிய செவிலியர் பணியில் சேர்வதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு மூலம் இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட 6 கல்லூரிகளில் தேர்வர்கள் சேர்க்கப்படுவர். இதற்கு திருமணமாகாத, விதவைகள் உள்ளிட்ட பெண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படிப்பு:

4 வருட பி.எஸ்.சி நர்சிங் - 2020 (பெண்கள் மட்டும்)

மொத்தம் = 220 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 14.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.12.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்தவும் கடைசி தேதி: 02.12.2019, மாலை 05.00 மணி வரை
ஆன்லைன் கணினி வழித்தேர்வு நடைபெறும் காலம்: ஏப்ரல்-2020
நேர்முகத் தேர்வு நடைபெறும் காலம்: மே-2020

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750

வயது வரம்பு:

01.10.1995 மற்றும் 30.09.2003 என்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்) மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களில் குறைந்தபட்சமாக 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், http://joinindianarmy.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
1. ஆன்லைன் கணினி வழித்தேர்வு 
2. நேர்முகத் தேர்வு & மருத்துவ தகுதி தேர்வு

குறிப்பு:
தேர்வு செய்யப்படுவோர், 4-வருட படிப்பு மற்றும் பயிற்சிக்குப்பின் மிலிட்டரி நர்சிங் சர்வீஸ்-இல் அக்ரிமெண்ட் (Agreement)/ பாண்டு (Bond) உடன் கூடிய வேலையில் அமர்த்தப்படுவர்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, http://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/Web_Advt_2020_revised.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.