கல்வி

அரசு மருத்துவமனைகளில் 2345 நர்ஸ் காலிப்பணியிடங்கள்!

அரசு மருத்துவமனைகளில் 2345 நர்ஸ் காலிப்பணியிடங்கள்!

webteam

தமிழக மருத்துவத் துறைக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2345 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
நர்ஸ் 

காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 2345 காலிப்பணியிடங்கள் 

சம்பளம்:
மாதம் ரூ.14,000 சம்பளமாகவும், ஆண்டு ஊதிய உயர்வாக ரூ.500- ம் வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.02.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 27.02.2019
ஆஃப்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 01.03.2019
தேர்வு நடைபெறும் நாள்: 23.06.2019

தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.700 
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PwBD - ரூ.350 

வயது வரம்பு:
ஓசி பிரிவினர் - 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.
எஸ்.சி / எஸ்.டி / பிசி / எம்பிசி பிரிவினர் / PwBD - 18 முதல் 57 வயது வரை இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை:
நர்சிங் டிப்ளமோ அளவில் எழுத்து தேர்வு முறை மூலம் 200 அப்ஜெக்டிவ் டைப் முறையில் வினாக்கள் அமையும். ஆங்கிலத்தில் மட்டுமே வினாக்கள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வானது 2.30 மணி நேரம் 100 மதிப்பெண்களுக்கு 200 வினாக்கள் கேட்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவை போன்ற 5 இடங்களில் மட்டுமே இத்தேர்வு நடைபெறும்.

கல்வித்தகுதி:
தேர்வர்கள் டிகிரி அல்லது டிப்ளமோ இன் நர்சிங் என்ற பட்டப்படிப்பை 07.02.2019 க்குள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நர்ஸ் (பெண்கள் & ஆண்கள்): ஜெனரல் நர்சிங் - இல் குறைந்தபட்சமாக 3-வருட பயிற்சி முடித்திருத்தல் அவசியம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், http://www.mrb.tn.gov.in/ - என்ற இணையதளத்திற்கு சென்று  ‘ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேசனை’ கிளிக் செய்து, பின் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற,
http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_Notification_07022019.pdf - என்ற இணையதளத்தை பார்க்கவும்.