இந்திய விமானப்படையில் ஏர்மேன் பிரிவின் கீழ் குரூப் -‘X’ (Education Instructor) ட்ரேடு என்ற பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் (Rally) கோவையில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளா, யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் & நிகோபார் மற்றும் லட்சத் தீவுகளை சேர்ந்த ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம்.
பணிகள்:
ஏர்மேன் பிரிவின் கீழ் குரூப் -‘X’ (Education Instructor) ட்ரேடு
முக்கிய தேதிகள்:
i) தமிழகம், புதுச்சேரி, அந்தமான் & நிகோபார் தீவுகளை சேர்ந்தவர்களுக்கான முகாம் தொடங்கும் நாள்: 17.10.2019, காலை 06.00 மணி
தமிழகம், புதுச்சேரி, அந்தமான் & நிகோபார் தீவுகளை சேர்ந்தவர்களுக்கான முகாம் நிறைவடையும் கடைசி நாள்: 20.10.2019
ii) கேரளா, லட்சத் தீவுகளை சேர்ந்தவர்களுக்கான முகாம் தொடங்கும் நாள்: 21.10.2019
கேரளா, லட்சத் தீவுகளை சேர்ந்தவர்களுக்கான முகாம் நிறைவடையும் கடைசி நாள்: 23.10.2019
வயது வரம்பு:
i) இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள்: 19.07.1995 ஆம் தேதி முதல் 01.07.2000 ஆம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
ii) முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்: 19.07.1992 ஆம் தேதி முதல் 01.07.2000 ஆம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, இளங்கலைப் பட்டம் (B.A With English / B.Sc with Physics / Chemistry / Mathematics / IT / CS / Statistics / BCA) முதல் அதிகபட்சமாக முதுகலைப் பட்டம் (M.A With English / M.Sc with Physics / Chemistry / Mathematics / IT / CS / Statistics / MCA) வரை படித்து தேர்ச்சி பெற்று அத்துடன் பி.எட் முடித்தவர்களாக இருத்தல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
முகாமில் கலந்து கொள்ளும்போது எடுத்துச்செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள், கல்விச்சான்றிதழ்கள், என்.சி.சி சான்று, பள்ளி / கல்லூரி மாற்றுச்சான்றிதழ் (TC), ஆதார் மற்றும் பான் கார்டு போன்றவற்றை மறக்காமல் எடுத்து செல்வது அவசியம்.
குறிப்பு:
ஒரிஜினல் மற்றும் 4 தனித்தனி நகல்களையும் எடுத்து செல்ல வேண்டும்.
தேர்வு நடைபெறும் முறை:
உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு போன்ற பல்வேறு தேர்வு முறைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
Indoor Stadium of Dept. of Physical Education,
Bharathiar University,
Coimbatore,
Tamil Nadu - 641046
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,
https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/COIMBATORE%20EDN%20INSTR%20final.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.