கல்வி

`தேர்வுக்கு தயாராகுங்கள்’: பிரதமரின் நிகழ்ச்சியை காணொலியில் பார்வையிட்ட நாமக்கல் மாணவிகள்

`தேர்வுக்கு தயாராகுங்கள்’: பிரதமரின் நிகழ்ச்சியை காணொலியில் பார்வையிட்ட நாமக்கல் மாணவிகள்

நிவேதா ஜெகராஜா

எத்தகைய சூழ்நிலையிலும் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் `தேர்வுக்கு தயாராகுங்கள்’ (Pariksha pe Charcha 2022) என்ற காணொலி நிகழ்ச்சியை நடத்தி, அதில் தலைமையேற்று பேசியும் உள்ளார் பிரதமர் மோடி.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடும் Pariksha pe Charcha 2022 நிகழ்ச்சி நடத்தது. `தேர்வுக்கு தயாராகுங்கள்’ என்ற தலைப்பில் அமைந்த அந்த நிகழ்ச்சியை, நாடு முழுவதுமுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படித்து வரும் மாணவ- மாணவிகள் காணொலி காட்சி மூலம் பார்த்தனர். பள்ளிகளே இந்நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும் இருந்தனர்.

அந்தவகையில் நாமக்கல் அருகே சின்ன வேப்பநத்தம் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ- மாணவிகள் தங்களது பள்ளி கலையரங்கத்தில் Pariksha Pe Charcha, தேர்வுக்கு தயாராகுங்கள் என்ற பிரதமரின் காணொலி நிகழ்ச்சியை பார்வையிட்டு பயனடைந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்களான, `எத்தகைய சூழ்நிலையிலும் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் முன்னேறிச் செல்ல வேண்டும். தன்னம்பிக்கையை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும். தேர்வுகளை தொடர்ந்து அவ்வப்போது எழுதி நம்மை நாம் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்தால் மட்டுமே தேர்வு நேரத்தில் மன அழுத்தம் வராமல் இருக்கலாம்’ போன்றவை தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.