கல்வி

பள்ளிகளை திறந்து மாணவர்களின் ஆரோக்கியத்தோடு விளையாட வேண்டாம்: கல்வியாளர் நெடுஞ்செழியன்

பள்ளிகளை திறந்து மாணவர்களின் ஆரோக்கியத்தோடு விளையாட வேண்டாம்: கல்வியாளர் நெடுஞ்செழியன்

kaleelrahman

கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீளாத நிலையில் பள்ளிகளை திறப்பது ஏற்புடையதல்ல என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.  புதிய தலைமுறையிடம் பேசிய அவர்.


“பள்ளிகளில் பத்துமாதமாக நாம் ஒன்றுமே சொல்லித் தரவில்லை. ஆன்லைனில் கல்விகற்கும் மாணவர்கள் 50 சதவீதம் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த மாணவர்களுக்கு இரண்டு மாதத்தில் சொல்லிக் கொடுத்து தேர்வு வைக்க வேண்டிய அவசியம் என்ன? தயவுசெய்து இனிமேல் அரசியலுக்கு வருபவர்களுக்கு தேர்வு வைக்கலாம். மாறாக குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.”என்றார்.