கல்வி

நீட் தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு

நீட் தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு

Sinekadhara

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 12-ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. 198 நகரங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி ஆக்ஸ்ட் 10 வரை நடைபெற்றது. அதன்பிறகு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் தேர்வு மையத்தை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓஎம்ஆர் தாளை பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.