கல்வி

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை!

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை!

webteam

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நெய்வேலியிலுள்ள பாரதி மைதானத்தில் 11 நாட்கள் நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டிலுள்ள கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கலாம்.

பணிகள்:
1. Soldier Technical
2. Soldier Technical (Aviation / Ammunition Examiner)
3. Soldier Nursing Assistant
4. Soldier General Duty
5. Soldier Tradesman
6. Soldier Clerk / Store Keeper Technical

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 09.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.05.2019
ஆன்லைனில் நுழைவு அட்டை வழங்கப்படும் நாள்: 21.05.2019
முகாம் தொடங்கும் நாள்: 07.06.2019
முகாம் நிறைவடையும் கடைசி நாள்: 17.06.2019
முதன்மை மருத்துவ சோதனை தேர்வு நடைபெறும் நாள்: 08.06.2019

வயது வரம்பு: 
01.10.2019 அன்று குறைந்தபட்சமாக 17 வயதுடையவராகவும், அதிகபட்சமாக 23 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக எட்டாம் வகுப்பு படித்தவர்களிலிருந்து, அதிகபட்சமாக இளங்கலைப்பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

பணிகளை பொருத்து கல்வித்தகுதியில் மாற்றங்கள் உண்டு.

தேர்வு நடைபெறும் முறை:
1. உடல் தகுதி தேர்வு
2. உடல் அளவு தேர்வு
3. மருத்துவ தேர்வு
4. பொது நுழைவுத் தேர்வு

தேவையான ஆவணங்கள்:
முகாமில் கலந்து கொள்ளும்போது எடுத்துச்செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள், நுழைவுச்சீட்டு, பாஸ்போர்ட் அளவு 20 வண்ண புகைப்படங்கள், கல்விச்சான்றிதழ்கள், இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்றிதழ், மதச் சான்று, பள்ளி நன்னடத்தை சான்று, மணம் புரியவில்லை என்பதற்கான சான்று, குற்றவழக்கில் ஈடுபடவில்லை என்பதற்கான சான்று, உறவுமுறைச் சான்று, என்.சி.சி சான்று, பள்ளி / கல்லூரி மாற்றுச்சான்றிதழ் (TC), ஆதார் மற்றும் பான் அட்டை போன்றவற்றை மறக்காமல் எடுத்து  செல்வது அவசியம். 

பிற நிபந்தனைகள்:
1. தேர்வின் போது மருத்துவ ரீதியாக தகுதி பெற்றிருக்க வேண்டும்.
2. 21 வயதுக்கு கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள், திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்திய ராணுவத்தில் சேர முடியும்.
3. நிரந்தர டாட்டூ / வரைவுகள் உடலின் சில பகுதிகளை தவிர்த்து மற்ற எந்தப் பாகத்திலும் இருந்தால், விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், www.joinindianarmy.nic.in - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களுக்கு,
http://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/RO__HQ__CHENNAI_ARMY_RECRUITMENT_RALLY_NEYVELI_07_JUN_2019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.