அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று மாணவர் சேர்க்கையும் முடிந்திருக்கிறது. இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர இருப்பதாகவும் அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
அந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள் சந்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர். மேலும், மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு வரும்போது எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.