இந்தியாவில் பணியில் உள்ள சுமார் 32 சதவீதம் பேர் சமூக வலைதளங்கள் மூலமாக பணியில் இணைந்ததாக வேலைவாய்ப்பு இணையதளமான லிங்க்டு இன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களைத் தேர்வு செய்யும் நிலை மாறி, எந்த நிறுவனத்தில் பணி வேண்டும் என்று ஊழியர்கள் தேர்வு செய்யும் நிலை வந்துவிட்டதாகக் கூறியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான வேலைவாய்ப்பு தரவுகளின் அடிப்படையில் இந்த தகவலை லிங்க்டு இன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.