செஞ்சியில் கொடூரமாக தாக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட பெண்ணுக்கு சுயநினைவு திரும்பவில்லை.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தனியார் வணிக வளாகத்தில் முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் மீட்கப்பட்ட விவகாரத்தில் மூவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணிற்கு இதுவரை சுயநினைவு திரும்பவில்லை.
இந்நிலையில் அங்கு சென்ற விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மும்தாஜ் அவரிடம் வாக்குமூலம் பெறமுடியாமல் திரும்பிச் சென்றார். அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைகளுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.