குற்றம்

தாம்பரம்:ரெம்டெசிவிர் மருந்தை ரூ.20 ஆயிரத்திற்கு விற்க முயன்ற மருத்துவர் உட்பட 3 பேர் கைது

தாம்பரம்:ரெம்டெசிவிர் மருந்தை ரூ.20 ஆயிரத்திற்கு விற்க முயன்ற மருத்துவர் உட்பட 3 பேர் கைது

webteam

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்ற மருத்துவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிமை பொருள் வழங்கல் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான போலீசாருக்கு சென்னை தாம்பரம் அருகே கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவிர் அதிகவிலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது, அங்கு மருத்துவர் முகமது இம்ரான் கான் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்க முயன்றது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மருந்தை திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் 4,700 ரூபாய்க்கு வாங்கி 20,000 ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்க முயன்றதும் இவருக்கு உறுதுணையாக மேடவாக்கத்தை சேர்ந்த விஜய்(29) மற்றும் திருத்தணியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் இருந்ததும் தெரியவந்தது.

தற்போது இவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.