குற்றம்

திருவாரூர்: அதிமுக கவுன்சிலர் கொலையில் தொடர்புடைய மேலும் 6 பேர் கைது!

திருவாரூர்: அதிமுக கவுன்சிலர் கொலையில் தொடர்புடைய மேலும் 6 பேர் கைது!

kaleelrahman

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்த ஆறு பேரை முத்துப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை ஆலங்காடு பகுதியில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி அதிமுக கவுன்சிலர் ராஜேஷ் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தற்போது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் இசக்கி முத்து (எ) போஸ் (24). வள்ளிமுத்து (எ) பால்பாண்டி (20), நாகராஜ் (எ) நாகு (26), கொம்பையா (28), முத்துக்குமார் (28), சின்னதுரை (28) உள்ளிட்ட 6 பேரை முத்துப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் ஆறு பேரும் தூத்துக்குடியில் இருந்து பேருந்தில் வந்து, முத்துப்பேட்டை அருகே கோபாலசமுத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கினர். அப்போது, டிஐஜி. ரூபஸ்குமார் மீனா உத்தரவின் பேரில் எஸ்பி. கயல்விழி நேரடி பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் எஸ்ஐ. ராஜா உள்ளிட்ட 2 தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பைக், 1 கார், துப்பாக்கி மற்றும் 5 கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அவர்களை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய முத்துப்பேட்டை போலீசார் சிறையில் அடைத்தனர்.