குற்றம்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

kaleelrahman

கோவையில் 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 11 ஆம் தேதி 14 வயது மாணவி காணாமல் போனார். இந்நிலையில், 6 நாட்களுக்கு பிறகு 16 ஆம் தேதி வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக, மாணவியின் தாயாரின் நண்பர் முத்துக்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். மாணவியின் தாயிடம் பெற்ற நகை மற்றும் பணத்தை மகளிடம் கொடுத்துவிட்டதாக குடும்பத்தினரை ஏமாற்றி, பின் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு கொலை செய்து உடலை வீசியதும், நகையை வைத்துக் கொண்டதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

நகைக்காக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முத்துக்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில், மாநகர காவல் ஆணையர் கைது செய்ய உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் உள்ள முத்துகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான மாநகர காவல் ஆணையரின் உத்தரவு நகல் சிறை நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டது.