மதகுபட்டி அருகே செங்கல் சூளை அமைக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அலவாக்கோட்டை கிராம ஊராட்சி மன்ற தலைவராக பிரகாஷம் என்பவர் இருந்து வருகிறார் இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளம் கம்பன் என்பவர் தன்னுடைய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கவும், அதற்கான மின் இணைப்பை பெறவும் ஊராட்சி ரசீது பெற தலைவர் பிரகாஷத்தை அணுகியுள்ளார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத இளம் கம்பன் இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். புகாரை பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனைப்படி, முதல் தவணையாக ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து இளம் கம்பன் பிரகாஷிடம் வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுக்களை பறிமுதல் செய்து,ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷை கையும்
களவுமாக கைது செய்தனர்.