குற்றம்

நாகர்கோவில்: 171 சதவிகிதம் கூடுதலாக சொத்து சேர்த்த மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்

நாகர்கோவில்: 171 சதவிகிதம் கூடுதலாக சொத்து சேர்த்த மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்

Veeramani

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், அவர் வருமானத்தை விட 171 சதவிகிதம் கூடுதலாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் கண்மணி மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனடிப்படையில் கண்மணி மற்றும் அவரின் உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

2 குழுக்களாக பிரிந்த அதிகாரிகள் 20 மணி நேரத்துக்கு மேலாக நடத்திய சோதனையில், 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும், 88 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் தனது வருமானத்துக்கு அதிகமாக 171 புள்ளி 78 சதவிகிதம் சொத்து சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.