குற்றம்

4ஆம் வகுப்பு சிறுமிக்கு ஆபாச ஸ்டிக்கர்களை அனுப்பிய 32 வயது ஆசிரியர் கைது

4ஆம் வகுப்பு சிறுமிக்கு ஆபாச ஸ்டிக்கர்களை அனுப்பிய 32 வயது ஆசிரியர் கைது

Veeramani

மும்பையை சேர்ந்த 32 வயதான பள்ளி ஆசிரியர், 4 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஆட்சேபனைக்குரிய ஸ்டிக்கர்களை அனுப்பிய காரணத்தால் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி அளித்த புகாரின் பேரில், குற்றம்சாட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளாக அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்துவந்தவர்.

டி.சி.பி மஞ்சுநாத் சிங்கே தலைமையிலான போலீஸ் குழு குற்றசாட்டப்பட்ட ஆசிரியரை கண்காணித்து கைது செய்ததுடன், அவரின் மொபைல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் இதேபோல நடந்த ஒரு சம்பவத்தில், 21 வயது ஆசிரியை, 6 ஆம் வகுப்பு மாணவனால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, அந்த ஆசிரியை, சிறுவனுடன் "பாலியல் அரட்டையில்" ஈடுபடாவிட்டால் அல்லது அவருக்கு பணம் கொடுக்கவில்லை எனில், அவர் மார்பிங் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதாக மிரட்டினார்.

காவி நகர் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் ஒரு சமூக மாணவர் பயன்பாடான டெலிகிராமில் ஒரு பொதுவான மாணவர் குழுவில் பங்கேற்பவர்கள் என்று காவல்துறையினர் கூறினர். அந்த சிறுவன் அங்கிருந்து அப்பெண்ணின் தொடர்பு எண்ணை எடுத்துக் கொண்டார்.

 அந்தப் பெண் இது தொடர்பான 18 ஸ்கிரீன் ஷாட்களை போலீசாருடன் பகிர்ந்துள்ளார். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தனது மொபைல் போனை யாரோ ஹேக் செய்ததாகவும், அந்த செய்திகளைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.