“அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவது குறைந்துள்ளது. தற்போதைய தாக்குதல் சம்பந்தமாக திமுக எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்துவருகின்றனர்” என்று குமரி மாவட்டம் குலசேகரம் அருகே தீர்வுகளம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்ராஜ் பேட்டியளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்பநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உண்ணியூர்கோணம் பகுதியில் மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் தீர்வுதளம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோதங்ராஜ் கூறுகையில், “தீர்வுதளம் நிகழ்ச்சி மூலம் சாதாரண மக்களின் பல்வேறு பிரச்னைகள் கவனத்திற்கு வந்துள்ளது. இதற்கு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் தீர்வு காணப்படும். இந்த தீர்வுதளம் நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு கைம்பெண்களுக்கான பிரச்னைகள் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்கு சிறப்பு கவனம் செலுத்தி தீர்வு காணப்படும். பல்வேறு சுற்றுலா தலங்கள் திறங்கப்பட்டுள்ள நிலையில், நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” போன்ற தகவல்களை தெரிவித்தார்.
பின் பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளங்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக கூறப்படும் புகாரை பொறுத்தவரையில், கடந்த அதிமுக ஆட்சியில் கல்குவாரிகளுக்கும் வனப்பகுதிக்கும் இருந்த சுற்றுச்சூழல் இடைவெளி குறைக்கபட்டதுதான் அதன் முக்கிய காரணம். தற்போது பல குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு அனுமதி மறுக்கபட்டுள்ளது. கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை பொறுத்தவரையில், மத்திய அரசு சட்டத்தின்கீழ் இரு மாநிலங்களுக்கிடையே கனிமவளங்களை கொண்டு செல்லும் நிலையின் கீழ் அது வருகிறது. இருந்தாலும் குமரி மாவட்டத்திலுள்ள கனிமவளங்களை பாதுகாக்க தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு எட்டபடும்.
இதையும் படிங்க... ”195-ல் 50 குடியிருப்பு பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழலாம்”- அமைச்சர் முத்துசாமி
தமிழக மீனவர்கள் தாக்குதலை பொறுத்தவரையில் கடந்த அதிமுக ஆட்சியை விட தற்போது தாக்குதல் குறைந்துள்ளது. தற்போது மீனவர்கள் மீது நடத்தபட்ட தாக்குதல் விவகாரத்திலும்கூட, மத்திய அரசிற்கு திமுக எம்பிகள் பாராளுமன்றம் வாயிலாகவும் நேரடியாகவும் மிகுந்த அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர்” எனவும் தெரிவித்தார்