சீனிவாசன் - இறைச்சிக்கடை உரிமையாளர் புதிய தலைமுறை
குற்றம்

நாமக்கல் - ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்: இறைச்சிக்கடை உரிமையாளரும் கைது!

பிரபல உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், உணவகத்துக்கு இறைச்சி விற்பனை செய்த இறைச்சிக்கடை உரிமையாளர் சீனிவாசன் என்பவரை கைது செய்தனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

நாமக்கல்லில் பிரபல உணவகத்தில் ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட 43 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதில் 14 வயது சிறுமியொருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், உணவகத்துக்கு இறைச்சி விற்பனை செய்த இறைச்சிக்கடை உரிமையாளர் சீனிவாசன் என்பவரை கைது செய்தனர்.

ஏற்கெனவே உணவகத்தின் உரிமையாளர் நவீன்குமார், சமையலர் சஞ்சய், தபாஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், 4ஆவது நபராக இறைச்சிக்கடை உரிமையாளர் கைது
செய்யப்பட்டிருக்கிறார். அவர்மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமி உயிரிழப்பு காரணமாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா, கிரில் சிக்கன் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்புரமணியன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களில் உள்ள உணவகங்களில் உணவு தயாரித்தலில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்று தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.