குற்றம்

தேனி: திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்தவருக்கு அபராதத்துடன் ஆயுள் தண்டனை

தேனி: திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை கொலை செய்தவருக்கு அபராதத்துடன் ஆயுள் தண்டனை

நிவேதா ஜெகராஜா

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த நபருக்கு எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2011 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி யைச் சேர்ந்த லோகிதாசன் என்ற வாலிபர் அதே பகுதியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே ஜெயப்பிரதா காதலித்த லோகிதாசனை திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும், திருமணத்திற்கு லோகிதாசன் சம்மதிக்காத நிலையில் காதலி ஜெயபிரதவை அணிந்திருந்த சேலையை கொண்டு கழுத்தை இறுக்கி நெரித்து கொலை செய்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பட்டியலின பெண்ணை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்ய மறுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளி காதலன் லோகிதாசன் என்ற இளைஞருக்கு எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை காவல்துறை தண்டனை விதித்து நீதிபதி சாந்தி செழியன் தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி லோகிதாசனை காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைக்க பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.