கோவையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான 17 வயது மாணவிக்கும் - ஆசிரியருக்கும் இடையேயான வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் பாதிக்கப்பட்ட மாணவி மன அழுத்தத்தில் இருந்ததும், ஆசிரியரால் நெருக்கடிக்கு ஆளானதும் தெரியவந்துள்ளது. இந்த உரையாடல், அந்த மாணவி பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் வாங்கும் முன்பே நிகழ்ந்திருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த குறுஞ்செய்தி உரையாடல் மற்றும் ஆசிரியருக்கும், மாணவிக்குமான அலைப்பேசி உரையாடல் வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தற்கொலைக்கு முன்பாக எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தற்போது நடந்த சம்பவம் தொடர்பானது இல்லை என மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்த கடிதம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
- ஐஷ்வர்யா
/தொடர்புடைய செய்தி: ‘உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால்...' - கோவை மாணவி உயிரிழப்புக்கு கனிமொழி கண்டனம்!/