குற்றம்

அரசு வழங்கிய பொங்கல் பணத்தை கேட்டு மனைவி வெட்டிக்கொலை

அரசு வழங்கிய பொங்கல் பணத்தை கேட்டு மனைவி வெட்டிக்கொலை

webteam

உசிலம்பட்டி அருகே பொங்கல் பணத்தை தரமறுத்த மனைவியை வெட்டிக்கொன்ற கணவனை போலிசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்தவர் ராஜாத்தி. இவருக்கும் ராமர் என்பவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் திருமணம் முடித்து கொடுத்த நிலையில் ராஜாத்தி கணவர் ராமருடன் வசித்து வந்துள்ளார். ராமர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் ராஜாத்தி அடிக்கடி கேரளாவிற்கு சென்று கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊரான எழுமலைக்கு வந்த ராஜாத்தியிடம் செலவுக்கு பணம் கேட்டதாகவும், அதற்கு அவர் இல்லை எனக் கூறியுள்ளார். இந்தச் சுழலில் ரேசன் கடையில் பொங்கல் பணம் வாங்கியிருக்கிறாய் அந்தப் பணத்தை கொடு எனக் கேட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு எதிர்ப்பாரத  விதமாக ராஜாத்தியை ராமர் அறிவாளால் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராஜாத்தி சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலறிந்து வந்த எழுமலை, போலிசார் உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை சம்பவம் குறித்து கணவர் ராமரை கைது செய்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர். பொங்கல் பணம் தரமறுத்த மனைவியை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.