ஈரோடு அருகே மூதாட்டிக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தன் பெயரில் பதிவு செய்த புகாரில் ரியல் எஸ்டேட் முகவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் மூதாட்டி கண்ணம்மாள் (65). இவருக்கு சொந்தமாக ஊத்துக்குளியில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இதில், ஒரு ஏக்கர் நிலத்தை ஈரோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவர் மூர்த்தி என்பவருக்கு கடந்த 2011ம் ஆண்டு விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு மீதமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தை கண்ணம்மாள் விற்பனை செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த இடத்தையும் மூர்த்திக்கு தன் பெயருக்கு பதிவு செய்தது தெரியவந்துள்ளது. மோசடி நடந்திருப்பதை அறிந்த கண்ணம்மாள் கடந்த 2021 ஆம் ஆண்டு நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.