குற்றம்

ஆபரேஷன் தியேட்டரில் அத்துமீறில்: டாக்டர் மீது புகார்

ஆபரேஷன் தியேட்டரில் அத்துமீறில்: டாக்டர் மீது புகார்

webteam

ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் அதன் காரணமாக, தன் உடல்நிலை மோசமாகி விட்டதாகவும் இளம் பெண் கொடுத்த புகாரை அடுத்து டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இளம் பெண்ணான இவர், உடல் நிலை சரியில்லை என்று அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். பரிசோதித்த டாக்டர், உடனடியாக ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டும் என்றாராம். எதற்கு, ஏன் என்றெல்லாம் சொல்லவில்லை. சம்மதித்தார் உமா. ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மயக்க மருந்துகொடுத்த பின், டாக்டர் அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டாராம். பின்னர் ஆபரேஷன் செய்து, அகற்றியுள்ளதாக சிறு சதைப் பகுதியையும் காட்டியுள்ளார். 

இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு முன்பிருந்ததை விட, உடல்நிலை இப்போது மேலும் மோசமானது. இதையடுத்து டாக்டர் மீது போலீசில் புகார் கொடுத்தார் அவர். 

அதில், ‘ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என்றும் அவர் ஆபரேஷன் செய்த பின், தனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் வலி நிவாரணி மாத்திரை இல்லாமல் உட்காரவோ, தூங்கவோ முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து டாக்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.