குற்றம்

103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கு: முன்னாள் டிஜிபியிடம் விசாரிக்க சிபிஐ திட்டம்

103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கு: முன்னாள் டிஜிபியிடம் விசாரிக்க சிபிஐ திட்டம்

Sinekadhara

சென்னையில் 103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கில், முன்னாள் டிஜிபியிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை பாரிமுனையில் செயல்பட்டுவந்த சுரானா என்ற நிறுவனம் தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதாக தகவல் கிடைத்தையடுத்து, 2012-ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 400 புள்ளி 47 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனம், பல்வேறு வங்கிகளில் 1,200 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளதை சுட்டிக்காட்டி, இதனை ஈடு செய்வதற்காக சிபிஐ சிறப்பு அதிகாரிக்கு இதுகுறித்து முடிவு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, லாக்கரில் உள்ள தங்க நகைகளை சோதனை செய்தபோது 400 கிலோவில், 296 கிலோ தங்கம் மட்டுமே இருந்துள்ளது. 103 கிலோ தங்கத்தை காணவில்லை.

இதுதொடர்பாக, சிபிஐயின் கூடுதல் இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஏடிஜிபியிடம், வங்கி மோசடி பிரிவு உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வழக்கு நடந்த காலகட்டத்தில் டெல்லி‌ சிபிஐயில் உயர் அதிகாரியாக பணியாற்றி, பின்னர் தமிழகத்தின் டிஜிபியாக இருந்தவரிடமும் ரகசிய விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.