ரயில் மூலம் கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற வடமாநில இளைஞரை ஈரோடு ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பீகார் மாநிலம் கட்டிஹார் முதல் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வரை செல்லும் அதிவிரைவு ரயிலில் ஈரோடு இருப்பு பாதை போலீசார் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பையை சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில், தடைசெய்யப்பட்ட போதை பொருள் மற்றும் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்குவங்காளத்தை சேர்ந்த பஃவதுல்லா என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், இவர், கேரளாவில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும் மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இளைஞரை ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.