குற்றம்

'சந்தேகம் வராமல் இருக்க 4 மாதம் சம்பளம் கொடுத்து' ராணுவத்தில் வேலை-ரூ. 16 லட்சம் மோசடி

'சந்தேகம் வராமல் இருக்க 4 மாதம் சம்பளம் கொடுத்து' ராணுவத்தில் வேலை-ரூ. 16 லட்சம் மோசடி

Abinaya

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற நபர், நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தபோதும், சம்பளம் வாங்கிய பிறகு, தான் பணியில் சேரக்க்கப்பட வில்லை என்ற நூதன மோசடி நடந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 20 வயதாகும் மனோஜ் குமார் என்பவர் தினசரி கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ராணுவத்தில் சிப்பாயாக இருந்த ராகுல் சிங்கின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ராகுல் சிங் ராணுவத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக மனோஜ் குமாரை நம்ப வைத்துள்ளார். ராணுவத்தில் வேலை வாங்கி கொடுக்க, 16 லட்சம் தேவைப்படும் என கேட்ட ராகுல் சிங்கை நம்பி, கஷ்டப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.


அதன் பின்பு, மனோஜ் குமாருக்கு வேலை கிடைத்து விட்டதாக கூறி, ராணுவ சீருடை, அடையாள அட்டை, துப்பாக்கி ஆகியவற்றை ராகுல் சிங் கொடுத்துள்ளார். மேலும் ராணுவ முகாம் இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது கூட்டாளியை , உயர் அதிகாரி போல் நடிக்க வைத்து, மனோஜ் குமாரை பரிசோதனை செய்து, வேலை உறுதி செய்யப்பட்டதாக நம்ப வைத்துள்ளனர்.


இதனை தொடர்ந்து, ராணுவ முகாமுக்கு வெளியில் பாதுக்காப்பு பணியில் 4 மாதம் , எந்த சந்தேகமும் எழாதவண்ணம் வேலை பார்க்க வைத்துள்ளார். சம்பளமாக ரூ.12,500 கொடுத்து வந்துள்ளார். ஒருநாள் சின்ன சின்ன சந்தேகங்கள் எழுந்து, முகாமில் இருக்கும் மற்ற ராணுவ வீரர்களுடன் பேசியதில், அவர்கள் மனோஜ் குமாரின் அடையாள அட்டையை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அது போலியானது என்றும், மனோஜ் குமார் ராணுவத்தில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

உண்மை அறிந்த மனோஜ் குமார் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. எந்த அளவுக்கு விழிப்புணர்வு குறைவாக இருந்தால், இந்த அளவுக்கு ஏமாறும் மக்கள் இருக்கிறார்கள் என இந்த செய்தி குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஏமாற்றுபவர்கள் புதுப்புது வழியை கையிலெடுப்பார்கள், நாம் தான் எச்சரிக்கையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. காவல்துறை ராகுல் சிங் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்து தேடி வருகின்றனர்.