சென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய சிறப்பு வாகனச் சோதனையில், விதிகளை மீறிய ஆட்டோக்கள் மீது ஒரே நாளில் 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை மேம்படுத்தவும் விபத்துகளை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து காவல் துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக விதிகளை மீறும் ஆட்டோக்கள் குறித்து சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றில் சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக 570 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிக நபர்களை ஏற்றி சென்றதாக 148 வழக்குகளும், பயணிகளிடம் அதிக கட்டணம் கேட்டதாக 42 வழக்குகளும், பயணத்திற்கு வர மறுத்ததாக 9 வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது