குற்றம்

காஞ்சிபுரம்: அரசு நிலத்திற்கு அரசிடமே ரூ.102 கோடி இழப்பீடு பெற்று மோசடி

காஞ்சிபுரம்: அரசு நிலத்திற்கு அரசிடமே ரூ.102 கோடி இழப்பீடு பெற்று மோசடி

Sinekadhara

புதிய தலைமுறையில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்ட 43 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பு விவகாரத்தில் 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

பீமந்தங்கல் கிராமத்தில் 43 ஏக்கர் நிலத்தை நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக அரசு கையகப்படுத்தியது. அதற்காக 72 உரிமையாளர்களுக்கு 102 கோடி ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டது. இதில் சென்னையைச் சேர்ந்த அஷிஷ் மேதாவுக்கு 33 கோடியும், மற்றொரு உரிமையாளருக்கு 9 கோடியும், எஞ்சிய 70 பேருக்கு 63 கோடியும் பிரித்து வழங்கப்பட்டது. ஆனால் இழப்பீடு பெற்றவர்களின் பட்டாக்கள் போலியானவை என்ற தகவலை புதிய தலைமுறை அம்பலப்படுத்தியது.

அரசுக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலமும் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றது உறுதியானதை அடுத்து, அவை ரத்து செய்யப்பட்டன. தொடர் விசாரணையில் மேலும் பல ஏக்கர் நிலங்களுக்கு போலி பட்டா வழங்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலி ஆவணம் தயாரித்த 2 நில உரிமையாளர்கள், 3 வருவாய் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.