குற்றம்

குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 100 கடைகளுக்கு சீல்

குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 100 கடைகளுக்கு சீல்

Sinekadhara

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 100 கடைகள் சீல் வைத்து மூடப்பட்டது.

தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஏற்கெனவே சென்னை மாநகராட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து, காவல்துறையின் சார்பில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களின் மீது சட்டரீதியான நடவடிக்கையும் அங்காடிகளின் மீது சென்னை மாநகர முனிசிபல் சட்டத்தின்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த திடீர் காவல்துறை ஆய்வில் சுமார் 11.66 டன் அளவு குட்கா, ஜர்தா, ஹான்ஸ் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர்களின் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் COTPA 2003ன்படி காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதியப்பட்டவர்களில் 100 வணிகக் கடைகளுக்கு சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 379A(1)ன்படி சீல் வைத்து மூடப்பட்டது. எனவே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை எக்காரணம் கொண்டும் சேமித்து வைக்கவோ விற்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.