கொரோனா வைரஸ்

மாநிலங்களுக்கு இதுவரை 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் - மத்திய சுகாதாரத்துறை

மாநிலங்களுக்கு இதுவரை 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் - மத்திய சுகாதாரத்துறை

Sinekadhara

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மாநில அரசுகள் அப்பணியை வேகப்படுத்தியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 97 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் ஒருசில தினங்களில் 100 கோடியைத் தொட இருப்பதாகவும் கூறியுள்ளது. அதே நேரத்தில், உற்பத்தியை அதிகரிக்க தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமும் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.