கொரோனா வைரஸ்

"கொரோனாவுக்கு எதிராக உலக மக்கள் 2 வருடம் போராட்டம்" - பிரதமர் மோடி பேச்சு

"கொரோனாவுக்கு எதிராக உலக மக்கள் 2 வருடம் போராட்டம்" - பிரதமர் மோடி பேச்சு

Veeramani

மனிதகுலம் கடந்த 2 ஆண்டுகளாக உலகளாவிய அளவில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக கடுமையாகப் போராடி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற 'Global Citizen Live' என்ற விழாவில் பேசிய அவர், தொற்று நோயை எதிர்த்துப் போராடியபோது கிடைத்த அனுபவம், நாம் ஒன்றாக இருக்கும்போது வலுவாகவும் சிறப்பாகவும் இருக்க கற்றுக் கொடுத்துள்ளதாகக் கூறினார். கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் தங்களால் முடிந்தவரை சிறப்பாகப் பணியாற்றியதை கண்கூடாகப் பார்க்க முடிந்ததாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய தடுப்பூசிகளை உருவாக்கியதில் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் துடிப்பை காண முடிந்ததாகவும் அவர் பாராட்டினார். மற்ற எல்லாவற்றையும்விட மனித நெகிழ்ச்சி நிலவிய விதத்தை தலைமுறையினர் நினைவில் கொள்வார்கள் என்று பிரதமர் பேசினார்.

பருவநிலை மாற்றம் குறித்து கவலை தெரிவித்த நரேந்திர மோடி, இது நம் கண்முன் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது எனக் குறிப்பிட்டார். உலகளாவிய சூழலில் எந்தவொரு மாற்றமும் முதலில் சுயமாகத்தான் தொடங்குகிறது என்பதை உலகம் ஏற்க வேண்டும் என்று மோடி கூறினார். இயற்கையோடு ஒத்துப்போகும் வாழ்க்கையை வாழ்வதே பருவநிலை மாற்றத்தை தணிக்க மிகவும் எளிய மற்றும் வெற்றிகரமான வழியாகும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.