கொரோனா வைரஸ்

மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராத ரசீது கொடுக்கும் மும்பை போலீஸ்

மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராத ரசீது கொடுக்கும் மும்பை போலீஸ்

Veeramani

மகாராஷ்டிராவில் கோவிட்-19 வழக்குகள் மீண்டும் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, மும்பை காவல்துறை, ஞாயிற்றுக்கிழமை மாலை, முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபதார ரசீது வழங்கப்படும் என்று அறிவித்தது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்கும் பொருட்டு, முகக்கவசம் அணியும் விதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் இது நடைமுறைக்கு வந்தது.  கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் முகக்கவசம் மட்டுமே "கேடயம்" என்று அவர் கூறினார்.

அன்புள்ள மும்பைக்காரர்களே, முகக்கவசம் அணியாத குற்றவாளிகளுக்கு அபதார ரசீதுகளை வழங்க மும்பை காவல்துறைக்கு இப்போது அதிகாரம் உண்டு. ஒவ்வொரு முறையும் ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாததற்காக நாங்கள் உங்களுக்கு அபராதம் விதித்தோம், அது எப்போதும் உங்கள் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பின் மதிப்பை உங்களுக்கு நினைவூட்டுவதாகும். முகக்கவசங்களுக்கும் அதே தான். ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு முக்கியம்என்று மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, சனிக்கிழமை மகாராஷ்டிராவில் 6,281 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, மாநில தலைநகர் மும்பையில் இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. மும்பை நகரத்தில் சனிக்கிழமை மொத்தம் 897 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதன்பின்னர் அமராவதி நகரத்தில் 806 புதிய வழக்குகள் பதிவாகியிருக்கிறது.