இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 18,833 பேருக்கும், நேற்று 22,431 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பின் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,39,15,589 என உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 13,85,706 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்திருக்கிறது. இதன்மூலம் இதுவரை இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த பரிசோதனைகள் 58 கோடி என உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பூசி இதுவரை 93.17 டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி: தமிழகத்தில் 1400 கீழ் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு
மத்திய சுகாதாரத்துறை சார்பில் இன்று காலை கொரோனா நிலவரம் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையின்படி, கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.96 % என உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த மார்ச் 2020 - க்குப் பிறகு மிக அதிகமான குணமடைவோர் விகிதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,963 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 3.32 கோடியாக (3,32,25,221) உயர்ந்துள்ளது.
தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 2,40,221 என்றாகியுள்ளது. கடந்த 205 நாள்களில், மிக குறைவான எண்ணிக்கையாக இது உள்ளது. மேலும் சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கையானது, மொத்த கொரோனா பாதிப்பில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது. இவையன்றி கடந்த 24 மணிநேரத்தில் 271 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.33% என்றாகியுள்ளது. இதுவரையிலான கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 4.5 லட்சத்தை (4,50,127) கடந்துள்ளது என்றாகியுள்ளது.