கொரோனா வைரஸ்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 8,209 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பவை: கடந்த 24 மணிநேரத்தில் 2,58,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,73,80,253 என்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.51 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமானதை தொடர்ந்து, இதுவரை மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,52,37,461 என உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 16,56,341 என்றாகியுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் இன்று ஒரே நாளில் 385 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,86,451 என அதிகரித்துள்ளது. இதற்கிடையில், 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 8,209 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3,109 பேர் குணம்பெற்றுள்ளனர். இதுவரை இந்தியாவில் சுமார் 157.2 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.