கொரோனா வைரஸ்

கேரளாவில் பரிசோதனைகள் அதிகரிப்பு - 15 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா தொற்று

கேரளாவில் பரிசோதனைகள் அதிகரிப்பு - 15 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா தொற்று

Veeramani

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக 12 ஆயிரத்திற்கும் கீழ் தொற்று பதிவாகி வந்த நிலையில் நேற்று தொற்று எண்ணிக்கை 12 ஆயிரம் கடந்தது. இன்று பரிசோதனைகள் அதிகரிப்பால் தொற்று 15 ஆயிரம் கடந்துள்ளது.

கேரளாவில் இன்று 1,03,871 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் புதிதாக இன்று 15,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று 90,394 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் புதிதாக நேற்று 12,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக 12 ஆயிரத்திற்கும் கீழ் தொற்று பதிவாகி வந்த நிலையில் நேற்று தொற்று எண்ணிக்கை 12 ஆயிரம் கடந்தது. இன்று பரிசோதனைகள் அதிகரிப்பால் தொற்று 15 ஆயிரம் கடந்துள்ளது. பரிசோதனைகளை பொறுத்தளவில் நேற்றைவிட இன்று 13,577 பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதனால் நோய் தொற்று நேற்றைவிட 3,753 எண்ணிக்கையில் இன்று அதிகரித்துள்ளது.

கேரளாவில் மொத்தபாதிப்பு எண்ணிக்கை 46,85,073 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 122 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மாநிலத்தில் மொத்தம் 25,087 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1,42,529 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் இன்று ஒருநாளில்  16,758 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், இதனால் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 45,12,662 பேர் குணமடைந்துள்ளனர்.